கோவை குறிச்சியில் கொரோனா மருத்துவ முகாமில் காலாவதியான ORS கரைசல் விநியோகம்..! பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை மதுக்கரை வட்டம், குறிச்சி அருகே கொரோனா மருத்துவ பரிசோதனை முகாமில் காலாவதியான ORS கரைசல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மதுக்கரை வட்டம், குறிச்சி அருகே கொரோனா மருத்துவ பரிசோதனை முகாமில் காலாவதியான ORS கரைசல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாநகராட்சி சார்பில் நேற்று நேற்று ஜூலை 23 ஆம் தேதி, வார்டு எண்: 94 குறிச்சி பகுதியில் உள்ள, உப்புலியார் திட்டு வீதியில் சிறப்பு கொரோனா மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

"நேற்று நடந்த முகாமில், பொது மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா..? என்று பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, சத்து மாத்திரைகள் மற்றும் ORS கரைசல் (Oral Re-hydration Salts) விநியோகம் செய்யப்பட்டது. அப்படி விநியோகிக்கப்பட்ட ORS பாக்கெட்டுகளின் தயாரிப்பு தேதியை பார்த்த போது, அதில் உற்பத்தி தேதி நவம்பர் 2017 எனவும், 18 மாதங்களில் காலாவதியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, " என வார்டு எண்: 94-ல் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

"இப்படி பேரிடர் காலத்தில், மக்களுக்கு இது போல் தரம் இல்லாத காலாவதியான மருந்துகளை வழங்குவதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை உட்கொண்டால் என்ன தீங்கு விளைவிக்கும் என்று நினைத்தால் பயமாக உள்ளதாக, வேதனையுடன் தெரிவித்தார்", அப்பகுதியில் உள்ள ஒரு பெண்மணி. 



இதனை தொடர்ந்து, முகாம் நடைபெற்ற அருகில் இருந்த மற்றவர்களிடம் விசாரித்த போது, ​​அவர்களுக்கு வழங்கப்பட்ட ORS பாக்கெட்டுகளும் காலாவதியானதாக தெரிவித்தனர். 

இத்தகைய காலாவதியான ORS கரைசலை கொரோனா மருத்துவ முகாம்களில் விநியோகிக்கப்படுவது மிகவும் கவலையளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரின் அலட்சிய போக்கையே வெளிக்காட்டுகிறது, என்று வருத்தம் தெரிவித்தனர். 



அதேசமயம், மற்ற வார்டுகளில் நடத்தப்பட்ட இம்மாதிரியான முகாம்களில், அத்தகைய ORS பாக்கெட்டுகள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை, எனவும் வைட்டமின் மாத்திரைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், வார்டு எண் 94ல் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த காலாவதியான ORS கரைசலை அப்புறப்படுத்தியுள்ளனர். இருப்பினும், அதனை உட்கொண்டுள்ள சிலர் அவர்களுக்கு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...