திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் முடிவுகள் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருப்பூர் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் தெரிவிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தினசரி 500 முதல் 1000 பேர் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் தற்போது பரவல் அதிகமாகி வருவதாகவும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் கால்நடை துறை சார்பாக 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு வெள்ளாடு கோழி மற்றும் கறவை பசுக்கள் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் கால்நடை சந்தைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.