கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கும் நிலையில், கொரோனா சிகிச்சை மையங்களும், நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 340 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. அங்கு லேசான அல்லது அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொடிசியா சிகிச்சை மையத்தில் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு நாளை முதல் கொரோனா உறுதி செய்யப்பட்ட அறிகுறியற்ற நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.