சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார்!

கோவை: சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை: சூலூர் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் நீராபானம் இறக்க அனுமதி மறுத்து போலீசார் மிரட்டுவதாக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தோட்டங்களில் நீரா பானம், பதநீர் மற்றும் கள் ஆகியற்றை இறக்க சூலூர் காவல்துறையினர் அனுமதி மறுத்து பானைகளை உடைப்பதும், பானைகளை எடுத்துச் சென்று தோட்டத்தின் உரிமையாளர்கள் மற்றும் கூலி ஆட்களை மிரட்டி செல்போனை பிடுங்கிச் செல்வது தொடர்கதையாகி வருவதாக நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

முதலமைச்சர் நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், கள்ளுக்கு தடை செய்வதை செயல்படுத்த முடியாது. ஏனெனில் நீரா பானம் இறக்கி அது நான்கு மணி நேரத்தில் புளிப்பு தன்மையை அடைந்து கள்ளாக மாறி விடும். இது இயற்கையின் செயல்பாடு என தெரிவித்தனர்.



இந்த நிலையில், கள் இறக்குவதாக காவல் துறையினரின் நடவடிக்கை எடுப்பது ஏற்கமுடியாது என தெரிவித்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், காவல் துறையினர் விவசாயிகளிடம் நடந்து கொள்வதை கண்டித்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...