கோவை: கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்யக்கோரி கோவையில் பா.ஜ.கவினர் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு கைது செய்யக்கோரி கோவையில் பா.ஜ.கவினர் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்த சஷ்டி கவச பாடல் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது இந்துக்கள் மனம் புண்படுத்தி உள்ளது என கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர பா.ஜ.க அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள அலுவலகம் முன்பு முருகன் படத்திற்கு பூஜை செய்த பின்னர் கந்த சஷ்டி கவசம் பாடியும் காவடி தூக்கி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடன் இருந்தவர்கள் திரிசூலத்தைக் கையில் ஏந்தி "முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா" என கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் நந்தகுமார் பேசுகையில், தமிழ் கடவுள் முருக கடவுளின் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்தை கூண்டோடு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். மேலும் தைப்பூச திருவிழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், கறுப்பர் கூட்டம் உறுதுணையாக இருக்கும் திமுக தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.