கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்‌ எஸ்.பி.வேலுமணி!

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.91 தொட்டராயன்‌ கோவில்‌ வீதி திட்ட சாலையில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.63.90 இலட்சம்‌ மதிப்பில்‌ புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன்‌ கூடிய தெருவிளக்குகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



பின்னர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.91 கொட்டராயன்‌ கோவில்‌ வீதி குறுக்கு சாலைகளில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.6.90 இலட்சம்‌ மதிப்பில்‌ கான்கிரீட்‌ தளம்‌ அமைக்கும்‌ பணிக்கு பூமி்பூஜையினை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்.



அதேபோல, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.91 கல்கி கார்டன்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.64.90 இலட்சம்‌ மதிப்பில்‌ உள்விளையாட்டு அரங்கம்‌ அமைக்கும்‌ பணிக்கு பூமி பூஜையினை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்.



மேலும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.90 சி.பி.எம்‌. கல்லூரி அருகில்‌ மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.63.90 இலட்சம்‌ மதிப்பில்‌ புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன்‌ கூடிய தெருவிளக்குகளை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...