கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.91 தொட்டராயன் கோவில் வீதி திட்ட சாலையில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.63.90 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெருவிளக்குகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.91 கொட்டராயன் கோவில் வீதி குறுக்கு சாலைகளில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.6.90 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு பூமி்பூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

அதேபோல, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.91 கல்கி கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.64.90 இலட்சம் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.90 சி.பி.எம். கல்லூரி அருகில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.63.90 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெருவிளக்குகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.