நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக மேல்கவ்வட்டியில் 10 பேருக்கும், கெந்தொரையில் 7 பேருக்கும் , மஞ்சகொம்பை,
அருவங்காடு, கடநாடு, புது அட்டபாயில், நஞ்சநாடு, வெலிங்டன், சின்ன குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், தொற்று உறுதியாகியுள்ள இப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இன்று தொற்று உறுதியானவர்களில் பலர் வயதானவர்கள் என்பதால் கூடுதல் கவனத்தோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்டத்தில் தற்போது 214 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், 371 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் எனவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.