இந்து மதத்தை இழிவுபடுத்துவோரின் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை - காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோவை: இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை என்று காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை என்று காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டது தொடர்பாக கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது பேசிய அவர், முருக கடவுள்களுக்கு ஏராளமான பாடல்களை ஆன்மிகவாதிகள் எழுதி இருக்கின்றனர். கவசம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்கும் கவசம் பாடப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார். இதை அருவருக்கத்தக்க பாடல் என்று யூ டியூப் வீடியோவில் ஒருவர் சொல்வது அநியாயமானது என கூறிய அவர், இதை தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் காவி கொடியுடன் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே போராடுகின்றன என தெரிவித்தார்.

இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த காமாட்சிபுரி ஆதீனம், இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் அந்த அளவிற்கு இந்துக்களின் மனம் வேதனையடைந்து உள்ளதாக தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வீடுகள் தோறும் கந்தசஷ்டி கவசம் வழங்க வேண்டும் எனவும் கந்த சஷ்டியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனக்கூறிய அவர், முருகனின் வேல் கொச்சைபடுத்தப்பட்டு இருக்கின்றது எனவும் வேலை கொச்சைபடுத்தியவரை இறைவன் தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேபோல, எவ்வளவோ பிரச்சினை இருக்கும் போது, சாதாரணமான இந்த பிரச்சினையை கிளப்பிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்றவர், கந்தசஷ்டி விவகாரத்தை பெரிதாக நினைக்க தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், தென்மாவட்டங்களில் முத்துராமலிங்க தேவரை முருக கடவுளாக பக்தர்கள் பார்க்கின்றனர் எனவும் முருகனை யாராவது இழிவுபடுத்தினால் முத்துராமலிங்க தேவரின் பக்தர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்சுவர சுவாமிகள் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் உடனிருந்தனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...