தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டி திருப்பூர் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று 8538 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 

இருப்பினும் தமிழகத்தில் காவலருக்கான பற்றாக்குறை அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் 2020 21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். 

ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் காவலருக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படுவது சந்தேகமே. ஏனெனில் தற்போதைய சூழலில் தேர்வுகள் நடத்தப்படும் பட்சத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்டு 2019 2020 ஆம் ஆண்டு அனைத்து தகுதிச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை காவலர் பணியில் அமர்த்தினால் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது. 

எனவே, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி நிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு காலி பணியிடங்களில் பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2019ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி நிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

மேலும், அப்படி வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை மட்டும்தான் நடைபெறும் எனவும் பயிற்சி பெறும் ஆறு மாத காலமும் எந்தவித சம்பளமும் வேண்டாம் எனவும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனா நிதி நெருக்கடியில் தவித்து வரும் தமிழக அரசுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...