கோவை: இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகளுக்கு வழங்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு, விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளால், இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகள் கைப்பற்ற வழிவகுக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இனைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் இரத்தை கண்டித்தும், மின்சார சட்டம் 2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்தம், நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்து உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.