கொரோனா சிறப்பு கடன் பெறுவதில் தொடரும் சிக்கல்; சிறப்பு முகாம் அமைக்க, கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

கோவை: கொரோனா கால சிறப்பு கடன் ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலைமையில் முகாம் அமைத்து வியாபாரிகளுக்கு கடன் பெற்று தர வேண்டும், என கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: கொரோனா கால சிறப்பு கடன் ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தலைமையில் முகாம் அமைத்து வியாபாரிகளுக்கு கடன் பெற்று தர வேண்டும், என கோவை சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6,150 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடன் பெறுவதில் சிக்கல் உள்ளதால், கடனை எளிய முறையில் பெற்று தர சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் பங்குபெறும் படி சிறப்பு அமைக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்:

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், வங்கி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் முகாம் அமைத்து சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும்.

மேலும் பதிவு பெறாத சாலையோர வியாபாரிகளிடம் உரிய ஆவணங்களை பெற்று பதிவு பெற வைக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...