தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் - மனித உரிமை ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி. பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய சித்திரவதை மரணத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஓராண்டுக்கு சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து துாத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த, மனித உரிமை ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், அந்த நோட்டீஸில் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்u பு கேமராக்களை பொருத்த வேண்டும். எனவும், அவற்றில் பதிவாகும் காட்சிகளை ஓராண்டு வரை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...