குன்னூரில் 2 வது சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி துவக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 வது சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று துவங்கியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 வது சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவுப்பணி இன்று துவங்கியது.



நீலகிரி மாவட்டத்தில் 2 வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், புகழ் பெற்ற குன்னூர் சிம்ஸ் பூங்காவில் புது மலர்கள் நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது.

1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளில் -- பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலர்களின் நாற்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாற்றுகளில், சில நாற்றுகள் உள்ளூரில் வகை எனவும், மற்றவை கடந்த சீசனில் மலர் செடிகளில் இருந்த விதைகளில் இருந்து சேகரித்து மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவிலும் நடவு செய்யும் பணிகளை இன்று தோட்டக்கலை துணை இயக்குனர் பெப்பிதா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தோட்டக்கலை துறையினர் கூறுகையில், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள இந்த செடிகள் அனைத்தும் செட்பம்பர் மாதம் கடைசி வாரத்தில் பூக்கத் தொடங்கும் என தெரிவித்தனர்.

மேலும், கொரோனா தொற்று முற்றிலும் முடிந்து, இந்த ஆண்டிற்கான 2-வது சீசனுக்கு, சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...