வாட்ஸ் ஆப் மூலம் கல்வி கற்க ஆர்வம் காட்டும் அங்கன்வாடி மைய குழந்தைகள்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு மூலம் அங்கன்வாடி ஊழியர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு மூலம் அங்கன்வாடி ஊழியர்களால் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முறை கல்வி கற்பித்தலை குழந்தைகள் ஆர்வத்துடன் பயின்று வருவதாக அங்கன்வாடி மைய ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குழந்தைகள் அங்கன்வாடிகளில் பராமரிக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர்.

வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதால் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு அடிப்படைக் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணாமக மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வாட்ஸ் ஆப் குழு மூலமாக குழந்தைகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளும் ஆர்வமுடன் கல்வி பயின்று வருவதால், பெற்றோர்களும் இடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது, என அங்கன்வாடி ஊழியகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர், மீனாட்சி கூறுகையில்:

‘‘குழந்தைகளுக்கு பாடம் கற்கும் பழக்கம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஊரடங்கால் குழந்தைகளுக்கு கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் அந்தந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை குழந்தைகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர், என்றார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...