கோவையில் ரோபோக்கள் மூலம் பாதாள சாக்கடை அடைப்பு சரிசெய்யும் பணிகள் துவக்கம்..!

கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகரில் மட்டும் 600 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கோவை: கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகரில் மட்டும் 600 கி.மீ. தூரத்துக்கு மேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதால், அடைப்புகளை உடனடியாக சரிசெய்ய தேவையான கட்டமைப்புகளுடன் கூடிய லாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்த லாரிகளை பயன்படுத்தி, பாதாள சாக்கடையில் ஆள் இறங்க அமைக்கப்பட்ட ‘மேன் ஹோல்’ வழியாக அதிக அழுத்தம் கொடுத்து அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்தினரால் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முதன் முதலாக கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கடந்த 17ம் தேதி ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

தற்போது இந்த ரோபோக்கள் தங்களது பணிகளை கோவையில் துவங்கியுள்ளன.

கோவை மாநகரில் உள்ள பாதாள சாக்கடைகள் அதிகபட்சம் 26 அடி ஆழம் கொண்டதாக உள்ளது. இந்த ரோபோ இயந்திரங்களை பயன்படுத்தி 30 அடி ஆழத்துக்கு கீழே உள்ள அடைப்புகளை கூட சரி செய்ய முடியும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்:

ரோபோவை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையின் மேன்ஹோல் அருகே ரோபோ இயந்திரத்தை நிறுத்தி, அதனுடன் கை போல் இணைக்கப்பட்ட ஒயர் பகுதிகள் குழிக்குள் இறக்கப்படும். அந்த இயந்திரத்தின் மேல் பகுதியில் உள்ள திரை மூலம், குழிக்குள் அடைப்பு ஏற்பட்ட இடத்தை காணலாம். அதற்கேற்ப இயந்திரத்தை பயன்படுத்தி அடைப்புகளை சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம்.

மேலும், அடைப்பை ஏற்படுத்திய கழிவுகளை ரோபோ இயந்திரம் வெளியே கொண்டுவந்து விடும், என்றார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...