கோவை: கோவையில் மலைவாழ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குத்தகைதாரரை தட்டிக்கேட்ட சம்பவத்தில் தோட்ட உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாக இருந்த குத்தகைதாரர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோவை நரசீபுரம் அருகே ராமசாமி (37) என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வெங்காயம் பயிரிட்டு வந்துள்ளார். இந்நிலையில், ராமசாமி அருகிலுள்ள பட்டியார்பதி என்ற மலைவாழ் கிராமத்திற்கு சென்று அங்கு உறங்கிக்கொண்டிருந்த சுமார் 24 வயது மதிப்புடைய திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண் சத்தமிட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் ராமசாமியை சரமாரியாக தாக்கி எச்சரிக்கை செய்து அனுப்பினர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அவர் பணியாற்றி வரும் தோட்ட உரிமையாளர் கார்த்திகேயனிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் ராமசாமியை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராமசாமி கோபத்தில் கார்த்திகேயனை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த வந்த ஆலாந்துறை போலீசார், சம்பவம் தொடர்பாக ராமசாமி மீது கார்த்திகேயனை கத்தியால் குத்தியதற்கு ஒரு வழக்கும், மலைவாழ் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதற்கு பாலியல் வன்கொடுமை, எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனி வழக்கும் என இரு வழக்காக பதிவு செய்து ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.