இன்றைய சூழலில் கோவை மக்களுக்கு தேவையானது ஸ்மார்ட்டான குளமா? பசுமை குளமா?

கோவை: கோவை மக்களுக்கு இன்றைய சூழலுக்கு தேவையானது பல்லுயுரிகள் வாழும் இயற்கையான குளம் தானே தவிர ஸ்மார்ட் ஆன குளம் அல்ல.

கோவை: கோவை மக்களுக்கு இன்றைய சூழலுக்கு தேவையானது பல்லுயுரிகள் வாழும் இயற்கையான குளம் தானே தவிர ஸ்மார்ட் ஆன குளம் அல்ல.

உக்கடம் பெரிய குளம் 327 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கிட்டத்தட்ட 5.2 கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. நொய்யலிருந்து வரும் ஆற்றுநீரை சேர்த்து வைக்கும் குளங்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், நாளடைவில் போதிய மழைப்பொழிவு இல்லாமல் போனது. சமூக நாகரீகமும், தொழில்துறையும் வளர வளர குளமும் மாசுபட தொடங்கியது. குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் வெளியாகும் கழிவுகள் மூலமாக பெரிய குளமானது மாசடைய தொடங்கியது.

இதையடுத்து, மாநகராட்சியின் தீவிரமான நடவடிக்கைகளுக்கு பிறகு நல்ல நிலைமைக்கு, அதாவது இயற்கையின் சமநிலைக்கு வந்தது. ஆனால், அதனை தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக சீரமைக்கப்படும் என்ற அறிக்கையும் வெளியானது. இதன் மூலம் குளம் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. முற்றிலும் இயற்கைக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டது என்கிறார்கள்.

குறிப்பாக ஏரியின் கரையில் களிமண்ணில் பலவிதமான உயிர்கள் இரை தேடும் அந்த இடத்தை கான்கிரீட்டால் நிரப்பி அழகு படுத்தி இருக்கிறோம். நம் நாட்டு மரங்களுக்கு பதிலாக அயல்நாட்டு மரங்களாக இருப்பது பறவைகளின் வாழ்விடத்திற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இடம்பெயரும் பறவைகள் பாதுகாப்பான இடத்தையும், மக்கள் குறைவாக உள்ள இடத்தையும் தேர்வு செய்கிறது. ஆனால், இந்த திட்டம் பொது மக்களின் பொழுது போக்கிற்காக மட்டுமே செயல்பட இருக்கிறது.

பறவைகளின் எச்சம் குளக்கரையில் விழுந்தால் தண்ணீர் மாசுபட்டுவிடும் என்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அதன் எச்சங்கள் முழுவதும் நீரில் வாழும் நுண்ணிய உயிரிகளுக்கு உணவாகவும், உரமாகவும் மாறி விடும். அதை உண்ணும் நாட்டு வகை மீன்கள் வளம் பெருகும். இந்த உணவுக்காகவும், பசுமை நிறைந்த இடத்திற்காகவும் பல வெளிநாட்டு பறவைகள் பயணித்து இக்கரையை அடைகின்றது.

பெலிக்கன், கூழைக்கடா, பாம்புத்தாரா, நாமக்கோழி இன்னும் நிறைய பறவைகள் பல மைல்கள் கடந்து வருகிறது. அவைகளுக்கு தேவை இயற்கையை சூழ்நிலை தான் தவிர செயற்கையால் உருவாக்கப்பட்ட செல்பி கார்னரோ, நடைபாதைகளோ, அயல் நாட்டு மரங்களோ அல்ல. ஸ்மார்சிட்டி திட்டத்தின் மூலமாக அனைத்து குளங்களை இணைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிப்பதே இவர்களின் நோக்கம் ஆகும். இதன் மூலம் பயன்பெறுபவர்கள் யார் ?சாதாரண அடித்தட்டு மக்களா அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா ?இல்லை, பணம் படைத்த பெரும் முதலாளிகள் மட்டுமே. 

அன்றாடம் உணவுக்காக போராடும் மக்களா சைக்கிள் பயணம், துரித உணவுகள் சாப்பிட போகிறார்கள். குறிப்பாக பெரியகுளம், வாலாங்குளம் பகுதிகளில் ரூ.39 கோடி ரூபாய் மதிப்பில் `ஐ லவ் கோவை' செல்ஃபி கார்னர், தண்ணீர் ஏ.டி.எம் போன்றவற்றை ஏற்படுத்தி உள்ளார்கள். கொரோனா நேரத்திலும் கூட மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பறவை ஆர்வலரிடம் பேசினோம். சிட்டியின் நடுவில் இருப்பதால் என்னவோ அதிக மாசுபாடாக இருக்கிறது. எந்த திட்டமாக இருந்தாலும் இயற்கைக்கு தொந்தரவு செய்யாமல் செயற்கையாக செய்தால் சரி தான். இக்குளத்தில் வெளிநாட்டு பறவைகள், உள்ளூர் பறவைகள் அனைத்தும் பதிவு செய்துள்ளோம். அவற்றிற்கு தேவை சிங்காநல்லூர், வெள்ளலூர் போன்ற பல்லுயுரி குளம் தான் தவிர ஸ்மார்ட் ஆன குளம் அல்ல. ஒரு இடத்தில் இயற்கை சமநிலையை கட்டுப்படுத்தி திட்டம் நிறைவேறினாலும் இயற்கை நிகழ்வுகள் வந்தாலும் கூட காப்பாற்ற இயலாது என்று தெரிவித்தார். 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...