பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள்: கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் மூன்றாவது இடம்

பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள்: கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி; மாநில அளவில் மூன்றாவது இடம்

கோவை: தமிழகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் துவங்கி 24-ந் தேதி வரை நடந்தது.

கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள கோவை, பேரூர், எஸ்.எஸ். குளம், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் பள்ளி மூலமாக 34 ஆயிரத்து 286 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

தனித் தேர்வாளர்களாக 632 பேர் என மொத்தம் 34 ஆயிரத்து 909 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.

பிளஸ்-2 தேர்வையொட்டி 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

அதில் கோவை மாவட்டம் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது. முதல் இடத்தை திருப்பூர் மாவட்டமும், 2-வது இடத்தை ஈரோடு மாவட்டமும் பிடித்தது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...