கோவை மாநகராட்சியில் 33 பகுதிகளில் 854 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கோவை: கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1300க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் பேசி அவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...