கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரொனா தொற்று உறுதி; காவல் நிலையம் மூடல்

கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவளர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவளர்களுக்கு கொரொனா  தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து 7 காவலர்களும்  இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது  

அவர் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில், கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு காவலர்களுக்கு  கொரொனா  தொற்று இன்று உறுதி செய்யப்பட்தன் காரணமாக, மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, காவல் நிலையம் அருகில் இருக்கக்கூடிய திருமண மண்டபத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சூலூர், துடியலூர், போத்தனூர் ஆகிய காவல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், நான்காவது காவல் நிலையமாக மதுக்கரை  காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

காவல் துறையினர் மத்தியில் வேகமாக அடுத்தடுத்து தொற்று பரவி வருவதன் காரணமாக காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...