Breaking: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசமணிக்கு கொரோனா தொற்று உறுதி; தனியார் மருத்துவமனையில் அனுமதி

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசமணி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரொனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக, தமிழக சுகாதார துறை அறிக்கை வெளியிட்டது. 

கொரொனா பாதிப்புள்ள உள்ள பகுதிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வந்தார். 

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகளும் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் தற்போது அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பயன்படுத்திய அறை மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவை மூடப்பட்டது. 



ஆட்சியரின் குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளுக்கும் கொரொனா பரிசோதனையானது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலிவலகத்திற்குள் வரும் நபர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரசோதனையானது நடத்தப்பட்ட, பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...