திருப்பூரில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து காப்பாற்ற வீடு வழங்கி உதவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு!

திருப்பூர்: மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து காப்பாற்ற வீடு வழங்கி உதவிடக் கோரி மாற்றுத் திறனாளி மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

திருப்பூர்: மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனை பராமரித்து காப்பாற்ற வீடு வழங்கி உதவிடக் கோரி மாற்றுத் திறனாளி மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.



திருப்பூர் கேவிஆர் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் மற்றும் ஜோதி தம்பதியினரின் மகன் அசோக் பாபு(37). இவர் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சந்திரசேகரன் தனது மனைவி ஜோதி மற்றும் மகன் அசோக் பாபு உடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார்.

இதுகுறித்து சந்திரசேகரின் மனைவி ஜோதி செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது மகன் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் நாங்கள் ஆசையாக அவனை வளர்த்து வருகிறோம். எங்களுக்கு 70 வயதுக்குமேல் ஆகிவிட்டது.

இதுவரை யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து விட்டோம். எனது மகன் சுயமாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் யாரும் வாடகைக்கு வீடு வழங்க மறுக்கின்றனர். மேலும் எங்களுக்கும் வயதாகிவிட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் எங்களின் மகனின் எதிர்காலத்தை நினைத்தால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

எனவே மாவட்ட ஆட்சியர் எங்களது மகனை பராமரித்து காப்பாற்ற நிதி உதவி வழங்க வேண்டும் என்றார். மேலும் எங்களுக்கு குடியிருக்க ஒரு வீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, எங்களது நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...