கோவை: கோவையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை துடியலூர் அருகில் வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர்(39). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் என்.ஜி.ஜி.ஓ காலனி ரயில்வே கேட் அருகில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஸ்பெலண்டர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மனோகரனிடம் இருந்த செல்போனை பறித்து தப்பியோட முயன்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கூச்சலிட்டபடியே இருவரையும் பிடிக்க முயன்றார். இவரது கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற இருவரை பிடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் கார்த்திக் (20) என்பதும் மற்றொருவர் தொண்டாமுத்தூர் சி.பி.சி. கார்டன் அவன்யூ பகுதியைச் சேர்ந்த பவுலேஷ் மகன் ஜிபின் வர்கீஸ்(40) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.