கோவையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தை உயிரிழப்பு - படுகாயமடைந்த மகன் மருத்துவமனையில் அனுமதி!

கோவை: கோவையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் தந்தை உயிரிழந்த நிலையில் காயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையை அடுத்த அன்னூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜ்(44). இவர் தன் மகன் தரணீதரனுடன் தனது யமஹா பைக்கில் கரியாம்பாளையம் - காரமடை சாலையில் பயணித்து கொண்டு இருந்த போது ஜுப்பிட்டர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த கந்தசாமி என்பவர் அதிவேகமாக வாகனத்தை இயக்கி மோதியதால் நடராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும், அவரது மகனுக்கு இரண்டு கால்களிலும் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நடராஜன் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அவரது மனைவி ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அன்னூர் போக்குவரத்து காவலர்கள் விபத்து ஏற்படுத்திய கந்தசாமியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நடராஜனின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...