கோவையில் அரசியல் இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

கோவை: கோவையில் அரசியல் இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோவை மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் அரசியல் இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோவை மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர், கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்ததாவது:-

ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகத்தை முடமாக்கும் செயல் என்றார்.

கொரொனா தொற்றுள்ள இந்த சூழலில் மருத்துவத்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, வருவாய்த்துறை இணைந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நேரத்தில் கோவை மாநகர் மற்றும் புறநகர் காவல் துறை அரசியல் இயக்க நிர்வாகிகள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதுடன் நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் முதல் இதர பொறுப்பு வகிப்பவர்கள், மதிமுக நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் ஆகியோரை பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மக்களின் பிரச்சனையை ஆளும் அரசின் கவனத்திறகு கொண்டு செல்லவும், உள்ளாட்சிதுறை அமைச்சரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து கருத்துரைத்துள்ளனர். அவ்வாறு செய்பவர்களை அச்சுறுத்தவே இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜனநாயக நாட்டில் ஆட்சியிலுள்ளவர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டமைக்கு சிறையிலடைப்பது என்பது ஜனநாயகத்தை முடக்கும் செயலாகும் என்றார்.

இவ்வாறான கைதுகளால் உண்மைகளை மறைக்க முடியாது எனவும் அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, சி.பி.ஐ சார்பில் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், கோவை மாவட்ட குழு செயலாளர் சுந்தரம், சி.பி.எம் சார்பில் ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...