கோவை: வால்பாறையில் அ.தி.மு.க அரசு தி.மு.க நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து வால்பாறை தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகரமன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான கோழிக்கடை கனேசன் தலைமை தாங்கினார்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செத்துப்போச்சு செத்துப்போச்சு ஜனயாநகம் செத்துப்போச்சு, கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பொய் வழக்கு போடும் அ.தி.மு.க ஆட்சியை கண்டிக்கிறோம் என கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கனேசன், தி.மு.க தொழிற் சங்கத் தலைவர் சௌந்தர பாண்டியன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் ஜானகிராமர், சத்தியவாணி முத்து உட்பட கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 11 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 15 பேர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.