முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை - முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கோவை: தமிழகத்தில் முதலமைச்சரின்‌ விரிவான காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ தனியார்‌ மருத்துவமனைகளில் கொரோனா நோய்‌ தொற்றிற்கு சிகிச்சை வழங்க முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் முதலமைச்சரின்‌ விரிவான காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ தனியார்‌ மருத்துவமனைகளில் கொரோனா நோய்‌ தொற்றிற்கு சிகிச்சை வழங்க முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதேபோல, முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை காப்பீட்டு திட்டத்தின் கீழ், கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேலும், கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...