கோவையில் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தல்

கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் அரியாண்டிபுரம் பகுதியை சேர்ந்த டைம்ஸ் மேரியின் மகள் பிரியா(25). இவருக்கும் கோவையை வீரபாண்டி நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி விநோத்(30) ஆகியோருக்கு கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது.

இத்தம்பதியினருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் நேற்று பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரியாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து பிரியாவின் உறவினர்கள் கூறுகையில், விநோத்திற்கு குடிபழக்கம் இருந்ததாகவும் பிரியாவின் தாயாரிடம் இருந்து பணம் வாங்கி தரச் சொல்லி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு டைம்ஸ் மேரி 10,000 ரூபாய் பணத்தை மகளுக்கு கொடுத்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று விநோத்தின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. இதற்கு பணம் வாங்கி தருமாறு பிரியாவை வற்புறுத்தியதால் இது குறித்து பிரியா தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தானே பணம் கொடுத்தேன், அடிக்கடி பணம் கேட்டால் என்ன செய்வது என டைம்ஸ் மேரி கேட்டு உள்ளார்.

இந்த நிலையில், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, பிரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் கொலை செய்யப்பட்டு உள்ளதாக சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...