திருப்பூரில் தனியாக வசித்து வரும் பெண்ணிடம் முறைதவறி நடந்தபோது ஒத்துழைக்காததால் தோசை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் தனியாக வசித்து வரும் பெண்ணிடம் முறைதவறி நடந்தபோது ஒத்துழைக்காததால் தோசை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மனைவி லட்சுமி(50). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் தனியாக வசித்து கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரவு லட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் பூபதி(22) கஞ்சா போதையில் லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி பூபதியை தாக்கியுள்ளார்.
இதில் மேலும் ஆத்திரமடைந்த பூபதி வீட்டிலிருந்த தோசைக்கல்லை எடுத்து லட்சுமியின் மண்டையில் அடித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பூபதியை பிடித்து உடனடியாக போலீசில் ஒப்படைத்தனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.