கோவை: கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற ஓட்டுனர் மீது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி மகளை காணாததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, போலீசாரின் விசாரணையில் மாணவியை அருகில் வசிக்கும் ஓட்டுனரான செல்வம்(32) கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரிய வந்தது.
இதனிடையே, மாணவியை மீட்ட போலீசார் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.