திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரவணன் மற்றும் செல்லதுரை ஆகிய இருவர் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக இருவரிடமும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து 15 கிலோ கஞ்சாவை கொரியர் சர்வீஸ் மூலம் அவிநாசி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சரவணன்(40) மற்றும் செல்லத்துரையை(34) கைது செய்த காவல்துறையினர், அவருக்கு உதவியதாக ரகு(30) மற்றும் ஹரிஷ் (24) என நான்கு பேரையும் கைது செய்து கஞ்சா கடத்தி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.