ஊத்துக்குளியில் 50 டன் அளவிற்கு வெண்ணெய் மற்றும் நெய் தேக்கம்..! விலை சரிவால் உற்பத்தியாளர்கள் வேதனை!

திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் நெய் விற்பனைக்கு அனுப்ப முடியாமலும் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதை நிறுத்த முடியாமல் வெண்ணெய் உற்பத்தியாளர்கள் கையறு நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: கொரோனா ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் நெய் விற்பனைக்கு அனுப்ப முடியாமலும் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதை நிறுத்த முடியாமல் வெண்ணெய் உற்பத்தியாளர்கள் கையறு நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உற்பத்தி செய்யப்படும் வெண்ணெய் மற்றும் நெய் இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற பெற்ற ஒன்றாகும். இங்கு வளர்க்கப்படும் மாடு, எருமைகளில் கிடைக்கும் பாலைக்கொண்டு வெண்ணெய் உற்பத்தியானது 5 முதல் 8 டன் வரை நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதுக்கும் வெண்ணெய் மற்றும் நெய் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.



மேலும் கேரள மாநிலத்துக்கு தேவையான தயிரின் 30 சதவீதம் ஊத்துக்குளியில் இருந்து ரயில் மற்றும் லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் ஊத்துக்குளியில் இருந்து வெண்ணெய் வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் அனுப்ப முடியாமல் போனது. மேலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் விற்பனையும் சரிந்து போனது. விவசாயிகளிடம் பெறப்படும் பாலுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில், வெண்ணெய் விற்பனை வருவாயும் இல்லாததால் கடன் வாங்கி விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

தினமும் உற்பத்தியாகும் பாலை விவசாயிகளிடம் பெற்று அதனை வெண்ணெய்யாக மாற்றி குளிர்பதன கிடங்குகளில் வாடகை அடிப்படையில் உற்பத்தியாளர்கள் இருப்பு வைக்க ஆரம்பித்தனர். தற்போது சுமார் 50 டன்னுக்கும் அதிகமாக வெண்ணெய் இருப்பில் உள்ள நிலையில், விலை 70 ரூபாய் குறைந்து கிலோ ரூ.350 விற்பனையாவதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறுகின்றனர்.



மேலும், தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மூலம் வெண்ணெய், நெய் விற்பனைக்கு சென்றாலும், தற்போதுள்ள இருப்பை தீர்க்கவே 3 மாதங்கள் தேவைப்படும் எனவும் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் இவற்றை அனுப்ப நடவடிக்கை எடுத்து வெண்ணெய் தொழிலை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...