கோவையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஆ. துரையை நேரில் சந்தித்து பேசினார் நா கார்த்திக் எம்.எல்.ஏ!

கோவை: கோவையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு ஆழியார் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஆ. துரையை, நா கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

கோவை: கோவையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு ஆழியார் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஆ. துரையை, நா கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.

கொரோனா பொது முடக்க காலத்தில், சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்ததாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீதும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு வீடியோ பதிவேற்றம் செய்ததாக செல்வராஜின் உதவியாளர் கீர்த்திஆனந்த் மீதும் அதிமுக எம்.எல்.ஏ சண்முகம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர் கீர்த்திஆனந்த் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர், பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைத்தனர். கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஆ.துரை இன்று அதிகாலை (2-6-2020)கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி, ஆழியார் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை செய்யாமல், தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், பொய் வழக்குகள் போட்டு கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஆ.துரை அவர்களை கைது செய்ததை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

மேலும், தென்றல் செல்வராஜ், கீர்த்திஆனந்த் என திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்து வரும் காவல்துறையின் இந்த மிரட்டலுக்கு திமுக என்றும் அஞ்சாது எனவும் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச்செயலாளர் ஆ.துரை உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேற்றையதினமே கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு போடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த கைது அச்சுறுத்தலுக்கு, திமுக ஒருபோதும் அஞ்சாது. கோவையில் அதிமுகவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்.

இந்த சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வடவள்ளி துரை, பகுதிச் செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...