கோவை: கோவையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது நான்கு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது நான்கு சக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை அடுத்து காரமடை பகுதி புங்கம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். ஓட்டுனராக பணியாற்றி வரும் இவர் கடந்த 31ம் தேதி மாலை புரூக்பாண்ட் சாலை சிரியன் சர்ச் அருகில் இயற்கை உபாதயை கழிக்க தான் ஓட்டி வந்த பொலேரோ நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை வாகனத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு சக்கர வாகனத்தை திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இயற்கை உபாதையை கழித்த பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது நான்கு சக்கர வாகனம் நிறுத்திய இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணகுமார், சுற்றும் முற்றும் தேடி உள்ளார்.
பின்னர் வாகனம் திருடப்பட்டு உள்ளதை அறிந்தவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.