கோவை: கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மொத்த வியாபார கடைகளுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில் டாடாபாத் லாரி பேட்டை பகுதியை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.

மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
பின்னர், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சாலை மற்றும் வடிகால் அமைப்பது குறித்தும், வார்டு எண்.9க்குட்பட்ட மாநகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் புதிதாக அமையவுள்ள மொத்த வியாபார காய்கறி மார்க்கெட் பகுதியையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில்அரசன், செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.