கோவையில் திருமணத்திற்கு ஒதுக்கிய நிதியை கொண்டு கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மணமக்கள்..!

கோவை: கோவையில் திருமணத்திற்கு ஒதுக்கிய நிதியை கொண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மணமக்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவை: கோவையில் திருமணத்திற்கு ஒதுக்கிய நிதியை கொண்டு கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மணமக்களுக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவருக்கும் ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த செல்வி என்பவருக்கும் இன்று காலை எலட்சிபாளையம் கிராமத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் இருவரும் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில், இன்று எலட்சபாளையத்தில் எளிய முறையில் இரு வீட்டாரும் நெருங்கிய உறவினர்களும் மட்டும் கலந்து கொண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரமாண்டமாக திருமணம் நடத்த வைத்திருந்த பணத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திருமணத்தை முன்னிட்டு நிவாரண பொருட்களை வழங்க மணமக்கள் இருவரும் திட்டமிட்டனர்.



இதனையடுத்து, இன்று காலை திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் எலட்சிபாளைத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் 450 பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர். ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பையினை புதுமண ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர். மணமக்களின் இந்த செயலை கிராம மக்கள் வாழ்த்தியபடி நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...