கோவை: கோவையில் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபரை தட்டி கேட்ட கட்டிட தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கான தண்ணீர் தேவைகள் குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, மான், காட்டெருமை என ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துவது அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்கு தற்போது வறட்சி என்பதாலும் வனத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதுள்ளதே காரணமாக கருதப்படுகிறது.
எனவே வனவிலங்குகளுக்கு வனத்தில் வனத்துறை ஏற்படுத்தியுள்ள தண்ணீர் தொட்டிகள், கசிவு நீர் குட்டைகளில் தண்ணீர் இருப்பு குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிக்குட்பட்ட புள்ளிக்குட்டை, ஓடந்துரை வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், வனத்துறை சார்பில் வனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் இருப்பு மற்றும் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் ஆழ்குழாய் கிணறுகள் அவற்றின் பயன்பாடு தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய புதியதாக ஏற்படுத்த வேண்டிய குட்டைகள் குறித்து ஆய்வு நடத்திய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்துவதுடன் வன விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உப்பு கட்டிகளை வைக்கவும் உத்தரவிட்டார்.