கோவை: கோவையில் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபரை தட்டி கேட்ட கட்டிடத் தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் சென்னையன்(42). கட்டிட தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சொக்கன் என்பவரது மகன் அசோக்குமார் குடிபோதையில் அப்பகுதியில் தங்கியுள்ள தனது தாய் மற்றும் பக்கத்து வீட்டாருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது, தூங்கிக்கொண்டிருந்த சென்னையன் அசோக்குமார் குடிபோதையில் கூச்சல் சத்தம் போட்டதை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அசோக்குமார் தனது மாமா மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுடன் தகராறு செய்து கொண்டிருந்ததோடு, தனது தாயையும் தாக்கியதால் சென்னையன் தாய் காயமடைந்தார்.
இதுகுறித்து தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, அசோக்குமாரை அப்பகுதியில் இருந்த வீட்டில் அடைத்து வைத்துள்ளார். வீட்டின் உள்ளே இருந்த ஒரு கத்தியை எடுத்து மறைத்து வைத்து வெளியே வந்த அசோக்குமார் கண் இமைக்கும் நேரத்தில் வெளியில் நி்ன்றிருந்த சென்னையனின் நெஞ்சுப்பகுதியில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சென்னையன் உயிரிக்கு போராடினார்.
இதனையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே சென்னையன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கட்டிடத்தொழிலாளியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.