கோவை: ஊரடங்கு காரணமாக வருமானமின்றி வாடும் மண்ணிசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட மண்ணிசை கலைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் பறையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தனர். அப்போது, வருமானம் இன்றி வாடும் தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 5000ற்கும் மேற்பட்ட மண்ணிசை கலைஞர்கள் உள்ளதாகவும் அதில் ஒரு சிலர் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். பெரும்பாலனவர்களுக்கு நலவாரியம் குறித்த சரியான புரிதல் இல்லாததே இதற்கு காரணம் என தெரிவித்தனர்.
மேலும், இந்த கலை அழியாமல் பாதுகாக்க பயிற்றுவித்து வரும் தங்களுக்கு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வருவதாக கூறிய அவர்கள், மண்ணிசை கலைஞர்கள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் விழாக்கள் சடங்குகள் சார்ந்தே வருமானம் கிடைக்கப்பெற்ற நிலையில் வரும் ஆறு மாதங்களுக்கு மக்கள் கூடும் நிகழ்வுகளில் எதுவும் நடைபெற கூடாது என்ற அரசின் அறிவிப்பால் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளதாக தெரிவித்தனர்.
அதேபோல, நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு 1000 ரூபாய் வீதம் இரண்டு மாதங்கள் வழங்கப்படும் என்பது போதுமானதாக இல்லை என தெரிவித்த அவர்கள், நலவாரியத்தில் பதிவு செய்த, பதிவு செய்யாத, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு வழங்கியது போல, நிவாரண பொருட்கள் மற்றும் உதவி தொகையை தங்களுக்கும் வழங்கிட வேண்டும் என்றனர்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மண்ணிசை கலைஞர்களுக்கு மாதம் 10,000 வீதம் 40,000 வழங்கிட வேண்டும், அரசு தடை நீடிக்கும் பட்சத்தில் தடை காலத்தில் 10,000 வழங்கிட வேண்டும், பயிற்சி மையங்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும், அரசின் திட்டங்களை பரப்புரை செய்யவும் மக்கள் வசிப்பிடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி வேலை வாய்ப்பினை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.