திருப்பூரில் அதிமுக சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
திருப்பூர்: அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரணமாக திருப்பூர் தெற்கு தொகுதிகுட்பட்ட பகுதியில் உள்ள 1000 குடும்பங்களுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் திருப்பூர் தெற்கு தொகுதிகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக கட்சி சார்பில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரணமாக 500 குடும்பங்களுக்கும் மற்றும் 500 முடி திருத்தம் செய்யும் குடும்பங்கள் என 1000 குடும்பங்களுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், குணசேகரன் இன்று வழங்கினார்.

சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண பொருட்கள் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முகக் கவசங்கள் அணிந்தும் நிவாரணப் பொருட்களை பெற்று சென்றனர்.
இந்த நிகழ்வில் திருப்பூர், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.