திருடபட்ட இரு சக்கர வாகனம் கொரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவை அருகே திருடப்பட்ட இரு சக்கர வாகனம் கொரியர் மூலம் திருப்பி அனுப்பி வைக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர், பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34).இவர் அப்பகுதியில் லேத் ஒர்க்சாப் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை தனது ஒர்க்ஷாப் முன் நிறுத்தி வைத்துவிட்டு சென்றவர், திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
எங்கு தேடி பார்த்தும் வாகனம் கிடைக்காததால் அருகில் பொருத்தபட்டு உள்ள சி.சி.டிவி கேமராக்களை சோதனை செய்த போது வாலிபர் ஒருவர் தனது பைக்கை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில், திருடியவர் அப்பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார் எனவும் மேலும் அவர் குறித்த எந்த விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில்
இருந்துள்ளார், சுரேஷ்.
இந்தநிலையில், நேற்று ஒரு கூரியர் கம்பெனியிலிருந்து
சுரேஷ் குமாருக்கு அழைப்பு வந்தது. அதில் பைக் ஒன்று அவருக்கு கூரியர் மூலம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது, சுரேஷுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. திருடுபோன அவருடைய இருசக்கர வாகனம் கூரியர் மூலம் வந்ததை
கண்டு வியந்தார்.
யார் பைக் ஐ கூரியரில் அனுப்பினார்கள்? எதற்காக அனுப்பினார்கள்? என்று ஒன்றும் புரியாத நிலையில் இருந்த சுரேஷ், உரிய கட்டணத்தைச் செலுத்தி தனது பைக்கை திருப்பி எடுத்து சென்றார்.
திருட்டு போன வாகனம் கொரியர் மூலம் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.