மேட்டுப்பாளையத்தில் இரவு நேரங்களில் விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளால் விவசாயிகள் கவலை
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மலையடிவார பகுதியாக இருப்பதால் இங்கு நாளுக்கு நாள் வன விலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த வனவிலங்குகளின் அட்டகாசம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, என தெரிவிக்கும் அப்பகுதி விவசாயிகள், தேக்கம்பட்டி, கல்லார், குரும்பனூர், நெல்லித்துரை உள்ளிட்ட மலை அடிவார பகுதிகளில் வாழை, தென்னை, மக்காசோளம் மற்றும் பல சிறு தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்கள் பயிர்செய்யபட்டுள்ள நிலையில், அதனை ருசிபார்க்க காட்டுயானைகள், பன்றிகள் என வனவிலங்குகள் படையெடுக்க துவங்கிவிட்டன.
நேற்று இரவு, குரும்பனூர் பகுதியில் உள்ள ஒரு மக்காச்சோள தோட்டத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை ஒன்று பல மணி நேரமாக அங்கேயே முகாமிட்டு பயிர்களை சேதப் படுத்தியுள்ளது.

சற்றும் அச்சப்படாத அந்த யானை வனத்துறை லைட்டுகள் அடித்து விரட்டியும் செல்லாமல் மக்காச்சோள பயிர்களை ருசிபார்த்தது. நீண்ட நேரம் கழித்து, பட்டாசுகள் வெடித்தும் சைரன் ஒலிகளை எழுப்பி அந்த யானையை விரட்டியடித்தனர்.
இது ஒரு புறம் இருக்க, மலை தொடர்களை விட்டு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கும் விளைநிலங்களையும் விட்டு வைக்காத காட்டு பன்றிகள் ஆங்காங்கே இருக்ககூடிய சிறு குன்றுகளில் பதுங்கி சோளப்பயிர்களை நாசப்படுத்தி வருகிறது, என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

"நேற்று இரவு பட்டக்காரனூர் கிராமத்தில் பூவதி என்பவரது சோளக்காட்டில் நுழைந்த பன்றி கூட்டம், சோளத்தில் இருக்க கூடிய தானிய சோளத்தில் இருக்க கூடிய தானிய குருத்துகளை தின்று, மிதித்து நாசப்படுத்தியது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்டிருந்த சோளப்பயிர்களை முழுவதும் சேதப்படுத்தியதால், ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது", என அப்பகுதி விவசாயிகள் கவலைப்பட தெரிவித்துள்ளனர்.
இப்படி, தொடர்ந்து வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.