பல்லடத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது! 7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல்
திருப்பூர்: பல்லடத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது. ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான மொபைல் போன் பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பல்லடத்தில் இயங்கி வரும் சங்கீதா மொபைல்ஸ் கடை கோவை - திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரவு மொபைல் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மொபைல் போன்கள் திருடப்பட்டது. இதனிடையே இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை தகவல் கிடைத்ததை அடுத்து இது குறித்து கடையின் விற்பனை மேலாளர் பிரதாப்பிற்கு தகவல் அனுப்பப்படாதாக கூறப்படுகிறது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து பல்லடம் குற்றப்பிரிவு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு கடை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திக்ஷா மித்தல் உத்தரவின் பேரில் பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் மேற்பார்வையில் பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில்பிரபு, முதல்நிலை காவலர் மதிவாணன், சேதுராமன், ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆய்வாளர் சுஜாதா தலைமையில் பனப்பாளையத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து பல்லடம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் பெயர் முபாரக் அலி(27) என்பதும், கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 28 வழக்குகளில் தேடப்பட்டுவந்த தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட முபாரக் தான் பல்லடம் சங்கீதா மொபைல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து முபாரக் அலியிடம் இருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 27 செல்போன்களை கைப்பற்றினர்.