கோவை: குறு மற்றும் சிறு தொழில்களுக்கு மார்ச் முதல் ஜீன் வரை மின் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் எஸ். பி.வேலுமணிக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
1. குறு மற்றும் சிறு தொழில்களுக்கு குஜராத் மற்றும் ஆந்திரம் மாநில அரசுகள் அறிவித்தது போல் மார்ச் 2020 முதல் ஜீன் 2020 வரை மின் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அறிவிப்பினால் எவ்வித தொழிலும்
நடைபெறாததால் மிக குறைந்த அளவே மின்சாரம் உபயோகப்படுத்தப்பட்டது. ஆகையால், மின்கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிப்பதால் அரசுக்கு மிகக் குறைந்த நிதிச்சுமையே ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
2. மத்திய அரசின் நிவாரண அறிவிப்பின்படி புதியதாக வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளுக்கு கடன் ஒப்பந்தத்தை மீண்டும் புதிதாக பதிவு செய்வதிலிருந்து (MOD Creation) விலக்கு அளிக்குமாறு தமிழக அரசை வேண்டுகிறோம்.
3. அமைப்புசாரா தொழில் முனைவோர் (வெட்கிரைண்டர், கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இரும்பு கிரில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், லேத் ஜாப் ஆர்டர், மோட்டார் வைண்டிங், பழுது நீக்குபவா்கள், உரிமம் பெற்ற தராசு பழுது நீக்குவோர் ஆகியோருக்கு நிவாரண உதவித் தொகையாக ஒரு இலட்சம் வரை தந்து உதவ வேண்டும்.
4. அனைத்து குறு, சிறு தொழில் முனைவோருக்கும் தாய்கோ வங்கி மூலம் புதிய கடன் திட்டங்களை வழங்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
5. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு 12% வட்டி வசூலித்து அதை மீண்டும் 6% பின்னூட்ட வட்டியாக திருப்பித்தரும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதை நேரடியாக 6% வட்டி வசூலிக்க வேண்டும். மேலும் இந்நிறுவனத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு விடுமுறைக் காலமாக (Moratorium) அறிவித்து ஊரடங்கு நாட்களுக்கு (6 மாத காலத்திற்கு) வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும்.
6. வெளிமாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வந்து சேர பேருந்துகளை இயக்க வேண்டுகோள்:
குறு சிறு தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட, தமிழக அரசு அனுமதித்த நாள் முதலாக இயங்கி வருகிறோம். கொரோனா தடுப்பு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை அரசு அறிவித்தபடி எங்கள் தொழிற்சாலைகளில் முறையாக கடைபிடித்துவருகிறோம்.
தற்போது வடஇந்திய தொழிலாளர்கள் கணிசமான பேர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று விட்டனர். வெளிமாவட்டங்களில் குறிப்பாக தமிழக தென்மாவட்டங்களில் உள்ள நமது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பஸ் வசதி இல்லாததால் பணிக்கு வந்து சேர இயலவில்லை. இ-பாஸ் அனுமதி பெற்று தனி வாகனங்களில் தொழிலாளர்கள் கோவை வந்து சேருவதற்கு அல்லது வரவழைப்பதற்கு எங்களுக்கு பொருளாதார வசதி இல்லை.
தொழிலாளர் பற்றாக்குறையால், தொழிற்துறை இயக்கம் பாதிக்கப்படுகிறது. வரமுடியாத தொழிலாளர்களுக்கும் ஊதிய இழப்பு ஏற்படுகிறது. எனவே வெளி மாவட்டத்திலுள்ள, எங்களது தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கோவை வந்து சேருவதற்கு அரசு பேருந்துகளை உடனடியாக இயக்க வழிவகை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
7. தமிழக பொருளாதார புனரமைப்புக் கமிட்டியில் (Economic Revival Committee) கோயமுத்தூர் குறு சிறு தொழில்துறையின் சார்பாக எங்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.