நீலகிரியில் ஊரடங்கை மீறியதாக கன்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்க வந்த போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்த கன்டோண்மென்ட் துணைத்தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


நீலகிரி: குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொதுமக்களுக்கு இலவச பொருட்கள் வழங்க வந்த போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்த கன்டோண்மென்ட் துணைத்தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு கடந்த 28ம் தேதி வியாழக்கிழமை குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாபு கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அப்போது, அதிமுகவை சேர்ந்த கன்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார், கவுன்சிலர்கள் துரைராஜ், சீனிவாசன், மேரி ஷூபா, லதா மற்றும் வழக்கறிஞர் தினேஷ் ஆகியோர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு காரை முற்றுகையிட்டு கறுப்பு கொடி காட்டி கோஷம் எழுப்பினர். அதிமுகவை சேர்ந்தவர்களே அதிமுக எம்.எல்.ஏ.விற்கு கறுப்பு கொடி காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இதனை தொடர்ந்து, குன்னூர் அருகேயுள்ள காரக் கொரையை சேர்ந்த மோகன் என்பவர் வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் ஊரடங்கு அமலில் இருந்த போது அதனை மீறி கூட்டம் சேர்ந்ததாக துணைத் தலைவர் பாரதியார் உட்பட 6 பேர் மீது வெலிங்டன் காவல் ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...