நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 300க்கும் மேற்பட்ட இளம் ராணுவ வீரர்கள் சனிக்கிழமை சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்நிலையில், 46 வாரங்கள் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் எல்லையில் பணிபுரிய இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பயிற்சி முடிந்து செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.
பயிற்சி வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.