குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானை..! ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்த ஒற்றை காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்த ஒற்றை காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தற்போது பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து உள்ளதால் இதனை சாப்பிடுவதற்காக சமவெளி பகுதியில் இருந்து கூட்டம் கூட்டமாக யானைகள் வரத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென சாலைக்கு வந்து வாகனங்களை மறித்தது. இதனை கண்ட வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே சாலையில் வாகனங்களை வரிசையாக நிறுத்தினர். யானை சாலையின் குறுக்கே ஒரு மணி நேரம் நின்று பிறகு மெதுவாக நடந்து ஒவ்வொரு வாகனத்தையும் நோட்டமிட்டு சாலையில் நடந்து சென்று மீண்டும் சாலையின் குறுக்கே நின்று வாகனங்களை மறித்தது.

அதேசமயம், வாகன ஓட்டுநர்கள் எந்த ஒலியும் எழுப்பாமல் பொறுமையாக இருந்தனர். சுமார் 1 மணி நேரம் சாலையில் நின்ற யானை சாலையின் அருகில் உள்ள செடிகளுக்குள் சென்றது.

இதனை தொடர்ந்து நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள் யானை மீண்டும் சாலைக்கு வருவதற்குள் வாகனத்தை இயக்கி சென்றனர். திடீரென அப்பகுதிக்கு யானை வந்ததால் உடனடியாக வனத்துறையினர் அப்பகுதிக்கு குன்னூரில் இருந்து வர முடிவதில்லை.

இதனிடையே, தற்போது தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே யானைகள் வாகனத்தை தாக்குவதற்கு முன்பாக இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...