திருப்பூரில் இருந்து அசாம் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறி அலைக்கழிப்பு! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேதனை!

திருப்பூர்: திருப்பூரில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறி அசாம் மாநில தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக கூறி அசாம் மாநில தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டதால் வேதனை அடைந்தனர்.

திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த காரணத்தால் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக காலை மூன்று மணிக்கே காவல்துறையினர் ரயில் நிலையம் வரவழைத்துள்ளனர். இதனை நம்பி ரயில்நிலையம் வந்த அசாம் மாநில தொழிலாளர்களிடம் இன்று சிறப்பு ரயில் இயக்கப்படாது என்று கூறி காவல் துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.



இதனால் ஏமாற்றமடைந்த அசாம் மாநில தொழிலாளர்கள் அரிசி கடை வீதியில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பள்ளிக்கு சென்றனர். டோக்கன் தருவதாக வரவழைத்து விட்டு தற்போது அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாகவும், காலை 3 மணியிலிருந்து காத்திருக்கும் எங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து தரவில்லை எனவும் எப்போது ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...