கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் ஹரி என்ற 48 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர்.
கோவில் அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கோவை கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரி ராம்பிரகஷ் (48) என்பவரை கைது செய்துள்ளனர்.
இன்று காலை அவர் கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பன்றி இறைச்சி கடையில், கறி வாங்கியுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அதை உறுதி செய்ய எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து டிவிட் செய்துள்ள கோவை மாநகர ஆணையாளர், சுமித் சரண் தெரிவிக்கையில், சம்பத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், சமூக வலைதளங்களில் யாரும் மதம் மற்றும் வெறுப்பு சார்ந்த உரையாடல்களை தவிர்த்து, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.